செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வண்ணான் குறி

"போடியார்... போடியார்..." 

சாய் கதிரையில் சாய்ந்துகொண்டு எதோ வாசித்துக் கொண்டிருந்த மாமா பார்வையை திருப்பினார்.
"பொடியனுகள் நம்மட
மெசின கடத்திட்டுப் பெயித்தானுகள் போடியார் "
பதட்டத்துடன் ஓடிவந்த ட்ரைவர் கமர் சொல்லிக் கொண்டிருந்தான். கைகள் பட படைக்க குரலும் தழு தழுத்தது பதட்டமும் பீதியும் கலந்து முகம் கறுத்துக் கிடந்தது.

"வேல் முருகுக் கட்டாடிட மகன் இயக்கத்துல இருக்கானாமே அவன்தான் ஆயுதத்தோட வந்து நம்மட மேசின கடத்திட்டுப் போறான் போடியார்" என்று முல்லைக் காரன் முஸ்தபாவும் சொன்னபோது ஜீவாதாரமாய் எஞ்சியிருந்த அந்த ஒரு உழவு மெசினையும் பறி கொடுத்ததில் மாமா ஆடித்தான் போய்விட்டார் என்றாலும் வழமையான அமைதியில் இருந்து அவர் சற்றும் கலவரமடைய வில்லை. எப்படிப் பட்ட இழப்பு களையெல்லாம் சந்தித்த தனக்கு இது ஒரு இழப்பா என நினைத்து மாமா மனதைத் திடப் படுத்திக் கொண்டாரோ என்னவோ முகம் சற்று சிவப்பேறி இருந்தது அவ்வளவுதான்

"வேல்முருகுட மகனாடா ?"
"ஓம் போடியார் "
"நம்மட வேல்முருகு கட்டாடிட மகனாடா?"
மீண்டும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்ட போதும்
"அவனா இருக்காதுடா"
என எளிதாகவே மாமா மறுத்து விட்டார்
மாமா விவசாயம் செய்யத் தொடங்கிய காலம் தொட்டு முஸ்தபாதான்
முல்லை காரன்  .
உழவு மெசின் வாங்கியதிலிருந்து காமரு தான் "ட்ரைவர்."
இருவரிலும் மாமாவுக்கு கடுகளவேனும் சந்தேகமில்லைதான்.
என்றாலும் ஏன் மாமா நம்ப மறுக்க வேண்டும்...?

மீன் படும் தேன் நாட்டின் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசம் மூன்று பிரதான ஊர்களைக் கொண்டது. ஓட்டமாவடி வயிறு என்றால் வாழைச்சேனை தலையாகவும் மீராவோடை வாலாகவும் ஒரு பாலமீன்போல நீண்டு கிடக்கும். இந்த மீராவோடையின் தெற்கே க
றுவாக் கேணி, கொண்டையன் கேணி ஊடாக இன்றைய அவலங்களை நினைந்தழுத்த கண்ணீர் போல ஓடி வரும் ஓடை மேற்கே காவத்த முனையை பிரிக்கும் மாதுறு ஓயா ஆற்றின் தலையில் வந்து விழும்

இந்த ஓடையை மையமாக வைத்தே ஊருக்குப் பெயர் வந்ததாக இரண்டு கதைகள் உண்டு.

ஓடைக்கு அருகில் மீரா உம்மா என்றொரு ஆதிக் குடி வாழ்ந்த தாகவும் அப் பெயரும் ஓடையும் புணர்ந்து மீராவோடையானதாகவும் மாரிகாலங்களில் அடைமழை விடாமல் கொட்டினாலும் இந்த ஓடை எல்லை மீறி ஊருக்குள் பெருக்கெடுக்காததால் மீறா ஓடை என்று அழைக்கப் பட்டு 

பின்னர் மீராவோடை ஆனதாகவும் சொல்வர்.

ஒரு பக்கம் ஓடையும் மறு பக்கம் ஆறும் மூன்றாம் பக்கம் வீதியுமாக அமைந்த இந்த முக் கோணத் துக்குப் பெயர்தான்  "வண்ணார வட்டை" இங்கேதான் வேல்முருகின் வீடும் இருந்தது.

அழகு கொஞ்சும் வண்ணார வட்டியின் அமைப்பும் வனப்பும் இப்போது அழிந்து போய் விட்டாலும் வண்ணார வட்டை பற்றிய நினைவுகள் பசுமையாய் இன்னும் அழியாமல் இருக்கிறது "வண்ணான் குறி"போல.
மாமாவின் மகன் அமீனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு இன்றுவரை விசால மானது.
சின்ன சைக்கிளில் மதரசாவுக்கு ஓதச் செல்வது முதல் பட்டம் விடுவது வளர்த்த கொக்குக்கு மீன் பிடித்துக் கொடுப்பது சின்ன "போட்" செய்து ஓடையில் ஓடவிடுவது புயலுக்குச் சாய்ந்த புளிய மரத்தில் பூப் பறித்து கூட்டாஞ்ச சோற்றுக்கு சம்பல் சமைப்பது என அனைத்து விடையங்களிலும் நாங்கள் இருவரும் இணைந்தே இருப்போம். எனது வீட்டை விடவும் மாமாவின் வீட்டிலேயே அந்த நாட்களில் எனது பொழுதுகள் அதிகம் கழிவதுண்டு.

"அமீன்... அமீன்....ரெண்டுபேரும் வேல் முருகுட வீட்ட போய் வாப்பா அவசரமா கொழும்புக்குப் போகணுமாம் என்டு கழுவின உடுப்பக் கொண்டு வரச் சொல்லிட்டு வாங்க..."
அந்த நாட்களில் மாதத்தில் ஒரு தடவையேனும் மாமாவின் குரல் இவ்வாறு ஒலிப்பதுண்டு. சொல்லிவிட்டு மாமா மறைய கையோடு கைதட்டி இருவரும் துள்ளிக் குதிப்போம். 

வண்ணார வட்டைக்குச் செல்வதென்றால் எங்களுக்குள் அப்படியொரு அலாதிப் பிரியம்

மாமாவின் வீட்டுக்கு முன்னால் பாலம் பாலத்துக்கு அருகால் செல்லும்
ஒழுங்கையால் சென்று நிமிர்ந்தால் வண்ணார வட்டியின் வனப்பை கண்களால் பருகிக் களிக்கலாம் பசும் பாலை "பவுசர்" களில் கொண்டு வந்து கொட்டி விட்டது போல நீர் அதில்  சவர்க்கார நுரையாலான சின்னச் சின்ன தாஜ் மஹால் மொட்டுகள் கரை ஒதுங்கும் .
இருகரையிலும் வெள்ளை வெள்ளையாய் வட்ட வட்டக் கற்கள் முழங்காலளவு நீரில் நல்லதம்பி, மயிலன் கட்டாடி, தெய்வம், கண்மணி பதக்கை என ஆண்களும் பெண்களும் கல்லோடு விளையாட எழும் "சக் சக் "  என்ற சத்தம் மனதுக்குள் தாளம் கொட்டும் அதி காலைச் சூரியன் உதிக்க காகம் கரைவது போல, கோழி கூவுவதுபோல விசேடமாய் எங்களூரில் அந்தச் "சக்இசக்" கும் தவறாமல் கேட்கும்
பாம்பு வேகத்தில் நகரும் நீரில் கால் வைக்க ஓடை கால்களில் கொலுசாகக்  குலுங்கும் 
பாட்டமாய் வரும் பொட்டியான் மீன்களும் பால் மொன்காங்களும் செல்லமாய் விரல்களைக் கவ்வி கூச்சமூட்டும் மிதந்து வரும் பந்துக்காய் பொறுக்கி எறிந்து கிறுக்குத் தனமாய் விளையாட நீர் கலங்கி மயிலன் கட்டாடியின் ஏச்சோடு கரையில் கால் வைத்தால் வெள்ளைச் சீனிபோல குருத்து மண் காலில் ஓட்டும் .
அந்த வெண் மணல் மேட்டில் வான் மேகங்கள் சிறகுலர்த்தும் அழகாய் பாடசாலைப் பிள்ளைகளின் வெள்ளை ஆடைகள் விரிந்து உலரக் கிடக்கும். 

பட்டு மணலில் காலூன்றி கணுக் கால் புதைய நடந்து நிமிர்ந்தால் உடல் சில்லிடும் தேத்தா மரத்தின் நிழலால்.
 

கோடை காலங்களில் ஓடையில் நீர்வற்றி ஓடை மெலிந்து எலும்புக் கூடாகிக் கிடக்கும் போதும் இவர்களின் பிழைப்புக்காக எதோ ஒரு சமூக நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப் பட்ட நீர் தாங்கிகளும், கிணறும் அவ்விடத்துக்கு இன்னும் குளிர் சேர்க்கும்.
அங்கே நிதானித்து அவ்விடத்தை விட்டு அகல்கையில் கால் சட்டைப் பைகள் இரண்டும் உப்பித் தொம்மென்றிருக்கும் தேத்தம் கொட்டைகளால்.
அதை கிணறுகளில் போட்டால் நீர் குளிரடையும் என்பதோடு அந்த நாட்களில் நவிசுக் குரும்பையோடு சேர்த்து தேத்தம் கொட்டைகளையும் தின்ற
தான ஞாபகம்.
அங்கிருந்து சிறு தூரம் நடந்ததும் புளியடித் துறை வீதி எதிரே ஒரே ஒரு கல்வீடு அது செல்லத் துரையின் வீடு .
அங்கிருந்து மூன்றாவது வீட்டுக்கு எதிர் வீடு வேல் முருகுக் கட்டாடியின் வீடுதான்.
"கேட்" இல்லாமல் மரக் குச்சிகளை நட்டுக் கட்டிய வேலி வாசலில் உயர்ந்து வளர்ந்த பெரிய செவ்வருத்தையும் இன்னும் மரங்களும் அதற்கருகில் நான்கு கம்புகள் நட்டு கோழிக் கூடுபோல சீலையால் அடைத்து ஒரூ பக்கம் திறந்தான அமைப்புக்குள் சாமிப் படம். பூக்கள் ஊதுபத்தி எரியும் அ
தைப் பார்த்துக் கொண்டிருக்க தைரியமின்றி ஓடி நடக்க வேல் முருகுக் கட்டாடி யின் வரவேற்ப்பு மகிழ்ச்சியை தரும்.
அங்கே போடியாருக் குரிய மரியாதை எங்களுக்கும் கிடைக்கும் முற்றத்தில் வெள்ளாவிப் பானை நெருப்புடன் கொஞ்சமும் ஒத்தாசை இல்லாத மகனை நச்சரித்துக் கொண்டே வேல் முருகின் மனைவி பெரிய வண்ணாத்தி அழுக்குத் துணியுடன் வேர்வை சிந்தி உழைப்பாள்.
 

வேல் முருகின் எங்கள் வயதை ஒத்த மகன் கருங்கலிக் கம்பு போல் கரு கருவென உடலுடன் கொஞ்சம் கூட கூச்சமின்றி முழு நிர்வாணமாய் நின்று எங்களைப் பார்த்து முறைப்பான்.
வேல் முருகுக்குத் தெரியாமல் ஒரு சுட்டு விரலில் மறு சுட்டு விரலை வைத்து அறுப்பது போல் பாவனை செய்து "சுண்ணி வெட்டிய சோனி " என்று ஜாடை காட்டுவான்.

"வாப்பாவுக்கு அவசரமா உடுப்புத் தேவையாம் உங்களைக் கொண்டு வரட்டாம்"
அமீன் சொல்ல இருவரும் விடை பெறுவோம்
மீண்டும் தேத்தா மரம் மணல் மேடு ,ஓடை பால் மொங்கான் என விளையாடி வீடு வந்து சேர
கம கமக்க அயன் செய்து மடித்த ஆடைகளின் அடுக்கு மாமாவின் வீட்டு மேசையில் இருக்கும்.
சாம்பல் பூத்த நெற்றி ,பெரிதான தாடி இல்லை என்றாலும் கி
மமாக "சேர்வ்" செய்யாத முகம்
சற்று நீளமாய் பின்பக்கம் கோதி விடப்பட்ட முடி, கண்ணுக்குக் கீழே கறுப்பாய் ஒரு மச்சம், வெள்ளை வேர்ட்டி, திறந்த மேனி, தோளில் ஒரு துண்டு, சற்று வளைந்த உருவம், அறுபதை அண்மித்த வயது இவை வேல் முருகுக் கட்டாடியை தெரிந்து கொள்ள சில குறிப்புகள்.  
 

ஏனோ மாமாவுக்கு வேல் முருகின் மீது ஒரு தனியான அன்பும் இவிருப்பமும் இருந்தது
மாமா மாமியிடம் அடிக்கடி கேட்டுத் தெரிந்துகொள்ளும் இரண்டு விடையங்கள் உண்டு.

வேல் முருகு வந்தானா, பீரிக்கு சாப்பாடு போட்டியா...?இந்த இரண்டுக்கும் மாமியின் பதில் ஆம் என்பதாகவே இருக்கும்.
ஒவ்வொரு பொங்கல் தினத்துக்கும் வேல்  முருகுக்கு ஒரு வேட்டியும் மனைவிக்கு ஒரு சாரியும் எடுத்துக் கொடுப்பதோடு ஒரு தொகைப் பணமும் வழங்குவது மாமாவின் வழக்கம்.  அத்தோடு வேல் முருகு உதவி வேண்டி வந்தால் வழங்கும் படி மாமியிடம் கண்டிப்பான உத்தரவும் இருந்தது. என்றாலும் வேல் முருகு அதைப் பயன்படுத்தி தொந்தரவு கொடுக்கவில்லை.
அத்தியாவசியத் தேவைகள் தவிர வருடத்தில் ஒருமுறைவரும் "நாக தம்பிரான்" கோவில் திரு விழாவுக்கு வசூல் பெற்றுச் செல்வார் அவ்வளவுதான். மாமா மீது வேல் முருகு கட்டாடியும் அப்படித்தான் நடந்து கொள்வார் மாமா எவ்வளவு எடுத்துச் சொன்ன போதும் மாமாவின் முன்னால் அமர்ந்திருக்க மாட்டார். தோளில் கிடக்கும் துண்டை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நின்று நன்றியுணர்வோடு வாலில்லாமலே குழைவார்.
அத்தோடு பொங்கல் தினத்தில் பெரியதொரு பொங்கல் பொட்டலம் மாமாவின் வீட்டுக்கு வரும்.

மாமாவின் வீட்டில் பொங்கல் தின்பது குறித்து விவாதம் நடப்பதுண்டு.
"எங்களைவிட தமிழர்கள் சுத்தம் புதுப் பான, புது சட்டி வாங்கித்தான் அவங்க பொங்கிற" .
"என்னண்டாலும் சாமிக்கிப் படைச்சத தின்னக் கூடாது" என்
இருபக்க நியாயங்களும் மொழியப்பட்டு இறுதியில் "பிஸ்மி"ச் சொல்லாமச் சமச்சத தின்னப்படா என்பதே வேல் முருகின் வீட்டுப் பொங்கலை நிராகரிக்கப் போதுமானதாய் இருக்கும்.
பகலுணவு உண்ட கழிவுகளையெல்லாம் மாமி துப்பரவு செய்து அள்ளியெடுத்து ஒதுக்குப் புறமாய் நின்ற பலாவடியில் கொண்டுபோய் கொட்ட
பசியோடிருந்த பீரி உச்சுக் கொட்டி ரசித்துக் கொண்டிருந்தது "புள்ள புள்ள என்ற சத்தத்துக்கு குசினிக்குள் எதோ செய்து கொண்டிருந்த மாமி முற்றத்துக்கு வந்தார்.
வெயிலில்  திரிந்த களை தீர முற்றத்துக் கொய்யா மரநிழலில் குந்தி ஆசுவாசப் பட்டுக் கொண்டிருந்தார் வேல் முருகு.          
ஏனோ மாமாவுக்கு வேல் முருகின் மீது ஒரு தனியான அன்பும் இவிருப்பமும் இருந்தது
மாமா மாமியிடம் அடிக்கடி கேட்டுத் தெரிந்துகொள்ளும் இரண்டு விடையங்கள் உண்டு இவேல் முருகு வந்தானா பீரிக்கு சாப்பாடு போட்டியா...?இந்த இரண்டுக்கும் மாமியின் பதில் ஆம் என்பதாகவே இருக்கும்.
ஒவ்வொரு பொங்கல் தினத்துக்கும் வேல்முருகுக்கு ஒரு வேட்டியும் மனைவிக்கு ஒரு சாரியும் எடுத்துக் கொடுப்பதோடு ஒரு தொகைப் பணமும் வழங்குவது மாமாவின் வழக்கம்.  அத்தோடு வேல் முருகு உதவி வேண்டி வந்தால் வழங்கும் படி மாமியிடம் கண்டிப்பான உத்தரவும் இருந்தது. என்றாலும் வேல் முருகு அதைப் பயன்படுத்தி தொந்தரவு கொடுக்கவில்லை.
அத்தியாவசியத் தேவைகள் தவிர வருடத்தில் ஒருமுறைவரும் "நாக தம்பிரான்" கோவில் திரு விழாவுக்கு வசூல் பெற்றுச் செல்வார் அவ்வளவுதான்.
மாமா மீது வேல் முருகு கட்டாடியும் அப்படித்தான் நடந்து கொள்வார் மாமா எவ்வளவு எடுத்துச் சொன்ன போதும் மாமாவின் முன்னால் அமர்ந்திருக்க மாட்டார். தோளில் கிடக்கும் துண்டை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நின்று நன்றியுணர்வோடு வாலில்லாமலே குழைவார்.
அத்தோடு பொங்கல் தினத்தில் பெரியதொரு பொங்கல் பொட்டலம் மாமாவின் வீட்டுக்கு வரும் மாமாவின் வீட்டில் பொங்கல் தின்பது குறித்து விவாதம் நடப்பதுண்டு.
"எங்களைவிட தமிழர்கள் சுத்தம் புதுப் பான புதுச் சட்டி வாங்கித்தான் அவங்க பொங்கிற" .
"என்னண்டாலும் சாமிக்கிப் படைச்சத தின்னக் கூடாது" என்ற இருபக்க நியாயங்களும் மொழியப்பட்டு இறுதியில் "பிஸ்மிச்" சொல்லாமச் சமச்சத தின்னப்படா என்பதே வேல் முருகின் வீட்டுப் பொங்கலை நிராகரிக்கப் போதுமானதாய் இருக்கும்.
பகலுணவு உண்ட கழிவுகளையெல்லாம் மாமி துப்பரவு செய்து அள்ளியெடுத்து ஒதுக்குப் புறமாய் நின்ற பலாவடியில் கொண்டுபோய் கொட்ட
பசியோடிருந்த "பீரி" உச்சுக் கொட்டி ரசித்துக் கொண்டிருந்தது
"புள்ள புள்ள" என்ற சத்தத்துக்கு குசினிக்குள் எதோ செய்து கொண்டிருந்த மாமி முற்றத்துக்கு வந்தார்.
வெயிலில்  திரிந்த களை தீர முற்றத்துக் கொய்யா மரநிழலில் குந்தி ஆசுவாசப் பட்டுக் கொண்டிருந்தார் வேல் முருகு. 
"எங்க கட்டாடி போன..."நேத்து முந்தனாத்தெல்லாம் கானயுமில்ல .
"கொஞ்சம் உடம்பு சரியில்ல புள்ள  அதான் "
"நீ..வராதது ஊடெல்லாம் ஊத்த உடுப்பாத்தான் கிடக்கு"
 என்ற வாறு உள்ளே போய் கிடந்த ஆடைகளை எல்லாம் கொண்டுவந்து குவித்துக் கொண்டிருந்தா மாமி

வேல் முருகு ஒரு சீலையை தரையில் விரித்து அதற்குள் அனைத்து ஆடைகளையும் அடக்கி முடிந்து தோளில் போட்டுக் கொண்டு
 

"எல்லாம் 24 துண்டு இரிக்கி புள்ள நான் வாறன்."
 

"தேயில வச்சிருக்கன்குடிச்சிட்டுப் போ கட்டாடி"
 

"இல்ல புள்ள விடியக் கழுவின உடுப்பெல்லாம் மணல்ல கிடக்கு மேயப்போன மாடாடு வந்திச்சும்டா மிதிச்சுப் போடும்."
சொல்லிவிட்டு வேல் முருகு விடை பெற்றார்.
மாமி மீண்டும் குசினுக்குள் நுழைந்து தின்ற பாத்திரம் களையெல்லாம் கிணற்றடியில் கொண்டு போய் போட்டு கழுவிக் கொண்டிருந்தா

உச்சி வெயில் சாய்ந்து கொண்டிருந்தது பள்ளி வாசலில் அசர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் ஆயத்தமாக ஒலி பெருக்கி ககரத்துக்கொண்டிருந்தது.தூக்கத்தில் இருந்த மாமா எழும்பி முகம் கைகாக்ல் அலம்பி பள்ளி செல்லத் தயாரானவர் அங்கும் இங்குமாகத் தேடிவிட்டு

"மரியம் பீபிட உம்மா ... மரியம் பீபிட உம்மா .."மாமா மாமியை அழைப்பது அப்படித்தான்
"முல்லைக் காரன் கொண்டு வந்த காசி பத்தாயிரத்தையும் எடுத்து வச்சியா ?"
 

"நான் காணல்ல அங்கதான் வெச்சிருப்பீங்க நல்லாத் தேடிப்பாருங்க"

கிணத்தடியில் இருந்தவாறே குரல் கொடுத்தா மாமி மீண்டும் தேடி ஏமாந்த மாமா
"அங்கேயே குந்திக் கொண்டிரு வந்து தேடிப் பாக்காம"

சற்று கடினமானது மாமாவின் குரல்.

"நான்  என்ன சும்மாவா இருக்கன் உட்டுட்டு வந்தா இங்கே  எல்லாத்தையும் நாய் மூச்சு உட்டுரும் திரும்பவும் நான்தானே கழுவனும் "
மாமி அலுத்துக் கொண்டார்
தொடர்ந்து மாமாவின் குரல் தடித்துக் கொண்டிருந்தது அதற்க்கு மாமியின் பதிலும் எதுவாக இருந்தது.
 

"புள்ள ....புள்ள.."
 

உள்ளே அங்கும் இங்குமாக பணத்தைத் தேடிக்கொண்டிருந்த மாமா வெளியே வந்தார்
வேல் முருகு கையில் பணத்துடன் நின்றுகொண்டிருந்தார்.அப்போதுதான் தான் வெளுக்கப் போட்ட சேர்டுகளின் பைகளை கவனியாமல் கவனயீனமாக நடந்து கொண்டது மாமிக்கும் உறைத்தது

"புள்ள கழுவப் போட்ட உடுப்புக்குள்ள பத்தாயிரம் பணம் இருந்திச்சி போடியார்."
சாதாரணமாகவே மாமாவிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வேல் முருகு சென்று விட்டார்.
மாமியின் கவனயீனம் காரணமாக வேல் முருகுக்கு இதே போன்று பல முறை நேர்ந்திருக்கிறது.
இப்படியாக வேல் முருகின் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் மாமாவுக்கிருந்த நம்பிக்கையின் விசாலம்தான் வேல் முருகின் மகன்தான் மேசினைக் கடத்திச் சென்றான் என்ற உண்மையை கடைசி வரை நம்பாமலேயே மாமா மௌத்தாகவும் போய் விட்டார்

தினகரன் வார மஞ்சரி
2005.03.13                                             

புதன், 21 ஜூலை, 2010

ஆறாவது பாங்கு


இரவில் விழிப்பதாகவும் பகலில் தூங்குவதாகவும் ஊரே மாறிக்கிடந்தது. அந்த இரவின் அபாயத்தை ஆகாயத்தில் வரைந்துகாட்டி அந்திச் சூரியன் முக்காட்டை எடுத்து மூட அந்த எல்லைக் கிராமம் பீதியால் நடுங்கிற்று.

என்ன நடக்கப்போகிறதோ?நிஸார் து}க்குக் கம்பிகளை கழட்டிஇ எஞ்சிய எலும்புகளையும் புதைத்துஇ மேசை நிலமெல்லாம் கழுவி முடித்து தட்டியை அடைத்து விட்டு நேரத்தை நினைத்து வானத்தைப் பார்த்தான் அவன் இறைச்சிக் கடை குழவி வடிய விட்டிருந்த இரத்தக்கறை வானத்திலும் பரவிக்கிடந்தது. ஆறரையைத் தாண்டியிருக்கும் என ஊகித்து அவசர அவசரமாகக் குளித்து முடித்தான்.

எத்தனை தடவை சோப் போட்டாலும் அகலாத இறைச்சி நெடியை அத்தர் பூசி மறைத்து போன பெருநாளுக்கு எடுத்த ''றொன்ஸன்'' சேட்டை உடுத்து அந்த மெல்லிய துணியால் வெளித் தெரிய ஆயிரம் ரூபாய்த் தாளை மடித்து பக்கட்டில் வைத்தான். கண்ணாடியை எடுத்து முன்பாகவும் இரு பக்கமாகவும் பிடித்துப் பார்த்துக்கொண்டான். அவன் உடம்பெல்லாம் லைலா ஊர்ந்து கொண்டிருந்தாள். அண்மைக் காலமாக நிஸாருக்கு ஆமினாவின் மகள் லைலாமீது ஒரு கண்தான்.நிஸார் ஒல்லி என்றாலும் தசைகள் முறுக்கேறி விறைத்த உடம்பு. பொது நிறம். ஆறடியை அண்மித்த உயரம். ஒரு கைக் குட்டையை மூலைவாட்டாக மடித்து தலையில் கட்டியிருப்பான்.

சரண் உடுத்து மடித்துக் கட்டினால் உள்ளே அணிந்த கட்டைக் கால்ச் சட்டையின் கால்கள் வெளியே தெரியும். ஒரு சிறு பிள்ளையையும் ''என்ன மச்சான்'' என்று பழகும் பண்பு.

ஊர் பயத்தால் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தாலும் நிஸாரின் கால்கள் லைலாவை நினைத்தே நடந்து கொண்டிருக்கின்றன.வாழ்வே வெறுத்துவிட்ட சோகத்தில் நடைப்பிணங்களாக இரை தூக்கிச் செல்லும் எறும்புகள்போல் கிராமத்தின் ஓரத்தில் இருந்தவர்களெல்லாம் மூட்டை முடிச்சிகளோடு ஆமினாவின் வீடு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.

ஆமினா தைரியமானவள். எந்த ஆண்களோடும் கூச்சமின்றிப் பேசுவாள். கணவர் கலந்தர் காக்கா அவளது பேச்சில் கட்டுண்ட நாயாய் வாலாட்டித் திரிவார். என்றாலும் கணவனுக்குத் துரோகம் நினைக்கமாட்டாள். ஆமினாவுக்கு மார்க்க ஈடுபாடு அதிகம். நோன்பு வந்து விட்டால் ''தராவீஹ்'' தொழுகைஇ''தஸ்பீஹ்'' தொழுகைஇ பெருநாள் தொழுகை எல்லாம் அவள் வீட்டிலேதான். ஊரின் நடுவில் சந்தைஇ பள்ளிவாயல்இ பாடசாலை என்பனவற்றுக்குச் செல்லும் வீதியில்தான் ஆமினாவின் வீடும் இருந்தது. ''அஸர்'' தொழுது ''ஸலாம்'' கொடுத்த கையோடு எதிர் வீட்டு சல்மாவோடு பேசுவது போல்தான் வீதிக்கு வருவாள். ''மஃரிப்'' ''பாங்கு'' சொல்லும் வரைக்கும் அந்த வீதியில் வருவோர் போவோரோடெல்லாம் பேசிப் பேசியே பொழுதைக் கழிப்பாள். இதனால் ஊரின் பிரச்சினை எல்லாம் ஆமினாவுக்குத் தெரிந்து விடுவதுபோல அவளது வீட்டுப் பிரச்சினைகளும் ஊருக்கே தெரிந்துவிடும்.

இது கலந்தர்க் காக்காவுக்குப் பிடிக்காதுதான் என்றாலும் அவர் கண்டு கொள்வதில்லை. இவளைத் திருத்த முடியாது என விட்டு விட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. என்றாலும் அவளது கள்ளம் கபடமற்ற பேச்சை மனதுக்குள் இரசிப்பார்.ஆமினாவின் மூத்த மகள் லைலா உம்மாவுக்குத் தப்பாமலே பிறந்திருக்கிறாள். அவள் வயதை ஒத்த குமரிப் பிள்ளை களையெல்லாம் வளைத்துப் போடும் வசீகரம் அவளுக்கு. விளையாடுவதில் அப்படியொரு அலாதிப் பிரியம். கண்ணுக்கு அருகே குண்டை வைத்து இலக்குக்கு எறிவதல் கெட்டிக்காரி. அவளோடு விளையாடவரும் ஆண் பிள்ளைகளையே தோற்கடித்து விடுவாள். தாவணி மடிப்பில் குண்டுகளை வைத்துச் செருகுவாள். அவள் இடுப்பைப் பாhக்கவே ஒரு கும்பல் நிற்கும்.இவ்வாறு ஆமினாவோடும் அவளது குடும்பத்தோடும். ஆதிக அறிமுகம் இருந்ததனால்தானோ என்னவோ ''மௌத்தாவதானாலும் எல்லாரும் ஒண்டா இருந்து மௌத்தாகுவம்'' எனக் கூறி இரவானால் ஊரவர்கள் ஆமினாவின் வீடே கதியென்று கிடந்தனர். ஆமினாவுக்கு ஊரின் நிலைவரம் குறித்த கவலை இருந்தாலும் மனிதரோடு மனிதராக கூடி இருப்பதில்தான் அவளுக்குக் கொண்டாட்டம் அரிக்கன் சட்டியில் இஞ்சி உரைத்து தேநீரூற்றி அனைவருக்கும் பரிமாறுவாள். கலந்தர் காக்கா சற்று கிண்டலான பேர்வழி. தனது வீட்டுத் திண்ணையை நிறைத்துக் கிடந்தவர்களை சிரிக்க வைக்க நினைத்து ''பாருங்க நம்மட வாழ்கைய பகலைக்குப் பட்டினி ராவைக்குப் பொட்டணி'' என்றார்.

''சும்மா இருங்க மனுசன் பர்ர பாட்டுக்கு உங்களுக்கு பகுடியும் வருகுதா? '' ஆமினா சிடு சிடுத்தாள். அங்கே குவிந்திருந்த பொட்டலங்களுக்குள்ளிருந்து மணிக் கூடொன்று பத்து மணியைப் பறைந்தது.

நேரம் சொல்லிவைத்துத் தொடங்கினாற்போல் து}ரத்தே சில துப்பாக்கி வேட்டுக்கள் கூடவே சில கூக்குரல்களும். ஆமினா முற்றத்துக்கு ஓடி வந்தாள். கிழக்கு வானம் தீப்பிடித்து எரிந்தது. எங்கும் புகை மண்டலம். காதைக் கிழிக்கும் அழுகுரல்களோடே

''அல்லாஹு  அக்பர்…அல்லாஹு  அக்பர்''

ஐந்து நேரத் தொழுகைக்கான பாங்கையே கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு ஆறாவது பாங்காய் அபாயத்தை அறிவிக்கும் பாங்கு அன்றுதான் அறிமுகமானது. அது இன்னும் அச்சத்தை ஊட்டிற்று.

வீதியால் ஒரு குரல் ''மாணிக்க ராசா சுட்டு வாரான் எல்லோரும் ஒடித் தப்புங்க'' கூவிக் கொண்டே அக்குரல் காற்றில் கரைந்தது. நிஸாரும் அவனது சகாக்களும் கத்தி கோடரியோடு ஊரின் எல்லையை நோக்கி ஓடினர்.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் மரணம் வந்துவிட்தை உணர்ந்து ''யா அல்லாஹ்… யா அல்லாஹ்…'' குரல்கள் கம்மின.

பாரூக் நானாவின் வீடு பத்துவதாகவும் மஹ்மூதுக் காக்காவை அடித்து நெருப்பில் வீசியதாகவும் செய்தி வந்தது. பெண்களையெல்லாம் ஆமினாவின் வீட்டுக்குள் அமர்த்தி ஆண்கள் கத்தி கோடரியோடு வீட்டைச் சுற்றிப் பாதுகாத்து நின்றனர்.

உச்சக்கட்ட சப்தங்கள் முடிந்தன. ஒருவாறாக துப்பாக்கி வேட்டுக்களும் அடங்கி கூக்குரல் குறைந்து கொண்டிருந்தது மாணிக்கராசாவும் அவனது சஹாக்களும் பின்வாங்கி ஓடிவிட்டதாக யாரோ ஒருவன் சொல்லிச் சென்றான்.நிஸார் தனது சகாக்களுடன் கம்பீரமாய் வந்தான். தனது நீளக்கத்தியில் உறைந்திருந்த இரத்தத்தை ஆமினாவின் வீட்டுக் கிணற்றில் கழுவினான். மாணிக்கராசாவின் துப்பாக்கியை பறித்ததாகவும் அவனது சகாக்கள் ஐவரை வெட்டிக் கொன்றதாகவும் மாணிக்க ராசா அதிஷ்ட வசமாக தப்பித்து ஓடிவிட்டதாகவும் வீராவேசமாய் முழங்கினான்.

ஆமினாவின் தாயார் தனது பொக்கை வாயால் ''என்ட ராசா செரியான நேரத்துல நீ போகலண்டா காபீர்கள் ஊரையே அழித்திருப்பானுகள்''

அவனைப் புகழ்ந்து கரம்பிடித்து முத்தமிட்டாள். நிஸார் கர்வத்துடன் கையைத் துடைத்துக் கொண்டான். அங்கிருந்த குமரிப் பெண்கள் நிஸாரின் வீரம் பற்றி புகழ்ந்து பேசினர். அவனது காலில் பட்டிருந்த காயம் ஒன்றிற்கு அந்த இரவிலும் குப்பி விளக்கின் ஒளியில் கையாந் தவரை பிடுங்கி மருதோன்றி அணிந்த கைகள் மருந்து கட்டின.

நிஸாரைக் கண்டு கொள்ளாத லைலா முதன் முறையாக அவனைப் பார்த்து வெட்கப்பட்டாள்.  தலை குனிந்து கால் விரலால் வட்டம் வரைந்தாள். முந்தானையை சரிசெய்தவாறு கடைக் கண்ணால் பார்த்துச் சிரித்தாள். நிஸாரின் உடலில் இருந்த உரோமங்கள் கத்தியாய் குத்திக் கொண்டு நின்றன. நிஸார் சுதாகரித்துக்கொண்டான்

விடிந்தது எரிந்த சாம்பலுக்குள் உடைந்த முன் பல்லை வைத்தே அப்பாவி மஹ்மூதுக் காக்காவின் உடல் இனம் காணப் பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அன்று ஊரே கண்ணீராகிக் கிடந்தது.என்றாலும் நிஸாரின் பெருமை ஊரெல்லாம் பரவிட்டு. நிஸாரின் வீரதீரச் செயலை ஊரே மெச்சின. குமரிப் பெண்கள் நிஸாரை மணமுடிக்க ஏங்கினர். பலரின் தொழுகைக்குப் பிந்திய பிரார்த்தனையில் நிஸார் இருந்தான். நிஸார் ஊரின் பாதுகாவலனாகவும் தலைவனாகவும் மதிக்கப் பட்டான்.பலரும் வாயில் விரல்வைத்து வியக்க நிஸார் தொடர்ந்தும் தனது நீளக் கத்தியை ஆமினாவின் கிணற்று நீரில் கழுவிச் செல்லச் செல்ல ஊரிலிருந்த மாடாடுகளும் குறைந்து கொண்டு சென்றதை அங்கே யாரும் கண்டு கொள்ளவேயில்லை.

( முற்றும் )

சனி, 27 மார்ச், 2010

கரையாக்கன்

பெரியம்மாவின் மகன் ஆப்தீன் காக்கா கருப்புதான் என்றாலும் சரியான பலம் அவருக்கு. அவருடன் சண்டைக்கு வரும் எப்படிப் பெரிய ஆளையும் வீழ்த்திப் போட்டுருவாரு. அவருக்கு தெறி கட்டையால நல்லா இலக்குக்கு தெறிக்கத் தெரியும். எனக்கு கொக்குத் தெறிச்சுத் தந்ததும் அவருதான் . 
எங்கட வீட்டுக்கு முன்னாலதான் பெரியம்மாவின் வீடு. அவங்கட வீட்டுக்கு முற்றமே ஓடைதான். குடிக்க எடுத்த தண்ணிக் கோப்பை போல சுத்தமா அழகா இருக்கும். பள்ளிக்கூடம், மதரசா போற நேரம் தவிர மற்ற நேரம் அந்த ஓடையிலதான் இருப்பன். தன்னிட மேல் மட்டத்தில சின்னச் சின்ன மீனெல்லாம் நிக்கும் உள்ளங்கை இரண்டையும் ஒன்டா இணைச்சி தண்ணிக்குள்ள தாட்டி மெது  மெதுவா மீனுக்கு நேர கொண்டுபோய் கைய உயத்தினா மீனெல்லாம் உள்ளம் கைக்குள்ள  மாட்டிக்கும். இல்லாட்டி காலால தண்ணிய கரைக்கு ஏத்திவிட்டா .....        

ஆறாவது பாங்கு

இரவில் விழிப்பதாகவும் பகலில் தூங்குவதாகவும்    ஊரே மாறிக் கிடந்தது.  இரவின் அபாயத்தை ஆகாயத்தில் வரைந்து காட்டி அந்திச் சூரியன் முக்காட்டை எடுத்து மூட அந்த எல்லைக் கிராமம் பீதியில் நடுங்கிட்டு. என்னநடக்கப் போகிறதோ நிசார் தூக்குக் கம்பிகளை கழட்டி, எஞ்சிய எலும்புகளையும் புதைத்து, மேசை நிலமெல்லாம் கழுவி முடித்து தட்டியை அடைத்து விட்டு நேரத்தை நினைத்து வானத்தைப் பார்த்தான். அவன் இறைச்சிக் கடை கழுவி வடியவிட்டிருந்த இரத்தக் கரை வானத்திலும் பரவிக் கிடந்தது. 
ஆறரையை தாண்டியிருக்கும் என ஊகித்து அவசர அவசரமாக குளித்து முடித்தான்.